வங்கி அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 5 லட்சம் மதிப்பிலான நகைகள், மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னகர் நியூசெல்வநகரில் வசித்து வருபவர் வங்கி உதவி மேலாளர் லட்சுமன். இவர் சென்ற எட்டாம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றுள்ளார்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் முன்பக்க கேட்டிலிருந்த பூட்டு கீழே உடைந்து கிடந்தது. வீட்டில் உள்ளே இருக்கும் மரகதவு நெம்பி திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமன் அறைக்கு சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த துணிகள் சிதறிய நிலையில் லாக்கரில் இருந்த ஐந்து லட்சம் மதிப்புள்ள 13 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, பிரேஸ்லெட், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், 17 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை திருட்டு போய் உள்ளது.
இதனால் லட்சுமன் செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீஸார் விரைந்து வந்து விசாரணை செய்தார்கள். விரல்ரேகை நிபுணர்கள் தடையங்களை சேகரித்தார்கள். மேலும் போலீசார் அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார்கள். இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றார்கள்.