Categories
தேசிய செய்திகள்

மத்தியபிரதேச வன்முறை…. 8 நாட்களுக்கு பின் முதல் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!!!!!

மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்வலத்தில்  நடைபெற்ற வன்முறையில் 8 நாட்களுக்கு பின் இன்று முதல் உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது. உயிரிழந்தவர் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் காணவில்லை என தேடப்பட்டு வந்த இப்ரீஷ் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தூர் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் உடலை அடையாளம் கண்டு இருக்கின்றனர்.

மேலும் இந்த உயிரிழப்பை மறைக்க காவல்துறையினர் முயற்சி செய்ததாக இப்ரீஷ் கான் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கார்க்கோன்  பகுதியில் வன்முறை வெடித்ததிலிருந்தே அவரை காணவில்லை எனவும் இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில்  வன்முறையின்போது 7,8 நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டதாக உள்ளூர் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இது  பற்றி மூத்த காவல் அதிகாரி ரோஹித் கஷ்வானி செய்தியாளர்களிடம் இன்று (திங்கள் கிழமை) பேசியதாவது, ஆனந்த் நகர் பகுதியில் வன்முறை ஏற்பட்ட மறுநாள் அடையாளம் தெரியாத உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இப்ரீஷ் கான் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது குடும்பத்தினரால் உடல் அடையாளம் காணப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |