”அலைபாயுதே” படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அலைபாயுதே”. இந்த படத்தில் கதாநாயகியாக ஷாலினி நடித்திருந்தார்.
காதல் கதையை மையமாக கொண்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. இன்றளவும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கமிட்டானது கார்த்திக் குமார் என கூறப்படுகிறது.