Categories
மாநில செய்திகள்

டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடல்….. சென்னை வந்தடைந்தது….!!!!

கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளன் உடல் சென்னைக்கு வந்தடைந்தது.

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு சார்பில் இளம் வீரர் தீனதயாளன் உள்ளிட்ட 4 வீரர்கள் நேற்று அசாமில் இருந்து மேகலாவுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது  சாலையின் எதிரே வந்த லாரி மீது அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தீனதயாளன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளன் உடல் சென்னைக்கு வந்தடைந்தது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் தற்போது சென்னை வந்தடைந்த நிலையில் தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடலை பெற்றுக் கொண்டனர்.

Categories

Tech |