வேடசந்தூரில் வீட்டுக்குள் நுழைந்த நான்கு அடி நாகப்பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூரில் இருக்கும் குறிஞ்சி நகரில் வாழ்ந்து வரும் முருகேசன் என்பவரின் வீட்டிற்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப்பார்த்த முருகேசன் குடும்பத்தார்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள்.
இதையடுத்து விரைந்து வந்த நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாடிப்படி அடியில் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்தார்கள். அந்த பாம்பானது 4 அடி உள்ள நாகப்பாம்பு ஆகும். பிடிக்கப்பட்ட அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டுவிட்டார்கள்.