குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SP தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை எழும்பூரில் இருக்கக்கூடிய சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் 12 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
12 பேரிடம் விசாரணை நடந்த நிலையில் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். முறைகேடு தொடர்பாக கைதான டிபிஐ அலுவலக உதவியாளர் ரமேஷ் , 2017இல் குரூப் -2(ஏ) தேர்வில் வெற்றிபெற்ற திருக்குமரன் , தேர்வாளர் நிதிஷ்குமார் ஆகிய 3 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.