மும்பையில் போக்சோ சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றமானது மகளை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்திய தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் சார்பாக வழக்கறிஞர் அளித்த வாதங்களை எல்லாம் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
மேலும் ஒரு தந்தை தான் அவரது மகளுக்கு அரணாகவும், மிகுந்த நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் இக்குற்ற செயல் என்பது மிகவும் மோசமான குற்றமாக கருதப்படுகிறது. எனவே இந்த வழக்கில் சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதைவிட, குறைவான தண்டனை எதுவும் வழங்க எந்தவித முகாந்திரமும் இல்லை. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.