Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன விட்டுப் போய்விட்டான்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ‌

கடலூர் மாவட்டத்தில் உள்ள நற்கரவந்தன்குடி பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மூத்த மகன் ரமேஷ் 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் வீரமுத்து மகன் உயிரிழந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

அதன்பின் திடீரென வீரமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது வீட்டுக்கு பின்புறம் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் வீரமுத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |