கீரமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் தொடர்மழையால் விலை பொருட்களை காயவைக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், குலமங்கலம், பனங்குளம், பெரியாளூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு, வேம்பங்குடி உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடலை, உளுந்து, எள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றார்கள்.
இந்நிலையில் கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அறுவடை செய்யப்பட்ட கடலை, உளுந்து உள்ளிட்டவற்றை காய வைக்க இயலாமல் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளார்கள். மேலும் அறுவடைக்கு தயாராக உள்ள கடலையானது செடிகளிலேயே முளைக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.