மாணவியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தெருக்கூத்துக் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெய்வணை கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெருக்கூத்து கலைஞர். இந்நிலையில் விஜய் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட தெருக்கூத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடித்துள்ளார். அப்போது மதியம் நேரத்தில் அதே ஊரில் இருக்கும் மாந்தோப்பு பகுதிக்கு விஜய் சென்ற போது 13 வயது 8-ஆம் வகுப்பு மாணவி ஆடு மேய்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது சிறுமியைப் பார்த்தத விஜய்க்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவியிடம் சென்று அவர் நைசாக பேச்சுக் கொடுத்து திடீரென மாணவியின் வாயை பொத்தி மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு வந்த வாலிபர் ஒருவர் சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு சென்ற போது விஜய் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது பற்றி சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் விஜயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.