இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 975 மற்றும் நேற்றைய பாதிப்பான 1,150-ஐ விட அதிகம். வெகுநாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2,000தை கடந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று மட்டுமே 214 பேர் இறந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் கேரளாவில் மட்டுமே 62 பேர் இறந்துள்ளனர்.நாட்டில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.
இப்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகின்றது. இது மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நான்காவது அலையின் ஆரம்பத்திற்கு அறிகுறியா என மக்கள் எண்ணுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத்தில் மாஸ்க் அணிவதை மீண்டும் கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.