Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. போலீஸின் செயல்….!!

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள சவுக்கார் பேட்டை பகுதியில் ஹார்த்தில் பாட்டியா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஹார்த்தில் பாட்டியா பச்சகுப்பம் மேம்பாலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த ஹார்த்தில் பாட்டியா மற்றும் அவரது நண்பர் லேசான காயமடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த காரை மீட்டுள்ளனர். பின்னர் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |