Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 19…!!

ஏப்ரல் 19 கிரிகோரியன் ஆண்டின் 109 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 110 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 256 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

531 – சிரியாவின் வடக்கே அல்-றக்காவில் பைசாந்திய இராணுவத்தினர் பாரசீகத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

797 – ஏதென்சு பேரரசி ஐரீன் தனது மகனும் பைசாந்தியப் பேரரசருமான ஆறாம் கான்ஸ்டன்டைனுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டார். கான்ஸ்டன்டைன் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, குருடாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கான்சுடண்டைன் இறந்ததை அடுத்து ஐரீன் தன்னை பசிலெயசாக அறிவித்தார்.

1506 – லிஸ்பன் நகரில் இரண்டாயிரம் வரையிலான யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

1713 – முடிக்குரிய ஆண்கள் இல்லாத நிலையில், புனித உரோமைப் பேரரசர் ஆறாம் சார்லசு அவரது மகள் மரியா தெரேசாவிற்கு ஆஸ்திரிய ஆட்சியுரிமை வழங்கப்படும் என அறிவித்தார்.

1770 – காப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியா என இன்று அழைக்கப்படும் கிழக்குக் கரையோரத்தைக் கண்ணுற்றார்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.

1782 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் ஐக்கிய அமெரிக்கா தனி நாடு என்னும் அங்கீகாரத்தை இடச்சுக் குடியரசிடம் இருந்து பெற்றார். நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் உள்ள அவரது வீடு அமெரிக்கத் தூதரகமாக மாற்றப்பட்டது.

1810 – வெனிசுவேலாவில் ஆளுநர் விசென்டே எம்பரான் கரகஸ் மக்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

1818 – பிரான்சிய இயற்பியலாளர் அகஸ்டீன் பிரெனெல் “ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய குறிப்பை” வெளியிட்டார்.

1839 – இலண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு இராச்சியமாக அறிவிக்கப்பட்டது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்டனர். நான்கு படையினரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

1903 – மல்தோவாவின் கிசினியோவ் நகரில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பாலத்தீனத்திலும், மேற்குலகிலும் அகதிகளாகக் குடியேறினர்.

1936 – பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் நாட்சிகளுக்கு எதிரான யூதர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது.

1943 – ஆல்பர்ட் ஹாப்மன் தான் ஏப்ரல் 16 கண்டுபிடித்த எல்எஸ்டி எனும் போதை மருந்தை தனக்குத் தானே முதற் தடவையாக ஏற்றிக் கொண்டார்.

1954 – உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாக்கித்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1971 – சியேரா லியோனி குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1971 – முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1975 – இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.

1984 – நியாயமான ஆத்திரேலியா முன்னேறட்டும் என்ற பண் ஆத்திரேலியாவின் நாட்டுப்பண்ணாகவும், பச்சை, பொன் நிறங்கள் தேசிய நிறங்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1988 – இந்திய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக மட்டக்களப்பில் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்த நிலையில் அன்னை பூபதி இறந்தார்.

1989 – அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1993 – ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்க எஃப்பிஐ இன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ், மற்றும் 18 சிறுவர்கள் உட்பட 76 பேர் கொல்லப்பட்டனர்.

1995 – அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதில் 19 சிறுவர்கள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டனர்.

1995 – சந்திரிகா – விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

1999 – செருமனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.

2000 – பிலிப்பீன்சின் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 131 பேரும் உயிரிழந்தனர்.[1]

2005 – கர்தினால் யோசப் ராட்சிங்கர் பதினாறாம் பெனடிக்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006 – நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2011 – பிடல் காஸ்ட்ரோ கியூபா பொதுவுடமைக் கட்சியின் முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.

2021 – இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி செவ்வாய்க் கோளில் பறந்து வேறொரு கோளில் பறந்த முதலாவது வானூர்தி என்ற சாதனையைப் படைத்தது.

2021 – ராவுல் காஸ்ட்ரோ கியூபப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். இதன் மூலம் கியூபாவில் காஸ்ட்ரோ சகோதரர்களின் 62 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இன்றைய தின பிறப்புகள்

1801 – குஸ்டாவ் பெச்னர், செருமானியக் கவிஞர், உளவியலாளர் (இ. 1887)

1864 – மகாத்மா அன்சுராசு, இந்திய ஆரிய சமாஜம் அமைப்பின் தலைவர், கல்வியாளர் (இ. 1938)

1892 – கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன், உருசிய-சோவியத் வானியலாளர் (இ. 1956)

1903 – கோ. சாரங்கபாணி, சிங்கப்பூர் ஊடகவியலாளர், தமிழ் ஆர்வலர் (இ. 1974)

1929 – குமாரி ருக்மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2007)

1937 – ஜோசப் எஸ்திராடா, பிலிப்பீன்சின் 13வது அரசுத்தலைவர்

1945 – மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி, கேரளக் கத்தோலிக்கப் பேராயர்

1948 – அலெக்சிய் சுதாரோபின்சுகி, உருசிய சோவியத் வானியலாளர்

1957 – முகேஷ் அம்பானி, இந்தியத் தொழிலதிபர்

1964 – கிம் வீவர், அமெரிக்க வானியலாளர்

1977 – அஞ்சு பாபி ஜார்ஜ், இந்திய நீளம் தாண்டு வீரர்

1979 – கேட் ஹட்சன், அமெரிக்க நடிகை

1981 – ஹேடன் கிறிஸ்டென்சன், கனடிய நடிகர்

1987 – மரியா சரப்போவா, உருசிய டென்னிசு வீராங்கனை

இன்றைய தின இறப்புகள்

1719 – பரூக்சியார், முகலாயப் பேரரசர் (பி. 1685)

1813 – பெஞ்சமின் ரசு, அமெரிக்க மருத்துவர் (பி. 1745)

1824 – ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கிலேய-இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1788)

1881 – பெஞ்சமின் டிஸ்ரைலி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1804)

1882 – சார்லஸ் டார்வின், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1809)

1889 – வாரன் தெ லா ரூ, பிரித்தானிய வானியலாளர், வேதியியலாளர் (பி. 1815)

1906 – பியேர் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1859)

1944 – சேலம் சி. விஜயராகாவாச்சாரியார், இந்திய அரசியல்வாதி (பி. 1852)

1955 – ஜிம் கார்பெட், இந்திய இராணுவ அதிகாரி, நூலாசிரியர் (பி. 1875)

1967 – கொன்ராடு அடேனார், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1876)

1973 – திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1896)

1974 – அயூப் கான், பாக்கித்தானின் அரசுத்தலைவர் (பி. 1907)

1988 – அன்னை பூபதி, ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932)

1993 – டேவிட் கொரேஷ், அமெரிக்க ஆன்மிகத் தலைவர் (பி. 1959)

1998 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞர் (பி. 1914)

2013 – சிவந்தி ஆதித்தன், தமிழகத் தொழிலதிபர் (பி. 1936)

2013 – செ. குப்புசாமி, தமிழக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1926)

இன்றைய தின சிறப்பு நாள்

பெரும் இனவழிப்பு நினைவு நாள் (போலந்து)

நாட்டுப்பற்றாளர் நாள் (தமிழீழம்)

Categories

Tech |