Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திடீரென மயங்கி விழுந்த ஊழியர்” விசாரணையில் தெரிந்த உண்மை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே  தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய காட்பாடி பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் கடையின் 6-வது மாடியில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  சக ஊழியர்கள் சுந்தரை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சுந்தரை  பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுந்தர்  மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி விட்டதா   என பார்க்க முயன்றுள்ளார். அப்போது திடீரென  தவறி கீழே விழுந்து சுந்தர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |