நடிகை நந்திதாவிடம் ரசிகர் ஒருவர் ஏடாகூட கேள்வி கேட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை நந்திதா தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் இடம் பொருள் ஏவல், வணங்காமுடி உள்ளிட்ட பல படங்களில் தற்போது நடித்து வருகின்றார். பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நந்திதா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நந்திதா ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது ரசிகர் ஒருவர் ஏடாகூட கேள்வி ஒன்றை முன்வைத்தார். அது நந்திதாவின் புகைப்படத்தை பகிர்ந்து வயுத்துல என்ன தழும்பு என கேட்டபோது நந்திதா பலரும் என் வயுத்துல இருக்கும் தழும்பு பற்றி தான் கேட்கிறார்கள். நான் dhee என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருப்பதால் தொடர்ந்து அமர்ந்து இருந்தேன். அப்போது நான் அணிந்திருந்த பாவாடையால் வந்ததுதான் அந்தத் தழும்பு என கூறியுள்ளார்.