Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை செய்த காரியம்”…. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!!!

கர்ப்பமாக இருக்கும் நடிகை பிரணிதா வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரணிதா உதயன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைபடத்தின் மூலம் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் பாலிவுட் திரைப்படத்திலும் நடித்து உள்ளார். இவர் காதலரான தொழிலதிபர் நிதின் ராஜுவை சென்ற 2021 வருடம் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கணவரின் 34 ஆவது பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இணையத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்தார்.

https://www.instagram.com/p/CcUZhY1vBQ2/?utm_source=ig_embed&ig_rid=3d3d5591-61d1-4572-a926-249f22147f6f

அதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளைக் கூறினார்கள். இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் இவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கர்ப்பிணிப் பெண் செய்யும் வேலையா இது? தயவுசெய்து ஒர்க் செய்ய வேண்டாம். குழந்தை பிறந்த பிறகு ஒர்க் அவுட் செய்து கொள்ளுங்கள். தற்போது நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுங்கள். நல்ல புத்தகங்களை வாசியுங்கள் என பல அட்வைஸுகளை கூறி வருகின்றார்கள்.

Categories

Tech |