Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரசிகர் கேட்ட கேள்வி… “மாஜி கணவரால் பட்ட வேதனை”… இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்த சமந்தா…!!!

சமந்தா ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தற்போது வெப்சீரிஸ்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் சில டாட்டூ வரையும் யோசனைகளை நீங்கள் முயற்சி செய்ய விரும்புகிறீர்களா? என கேட்டுள்ளார்.

அதற்கு சமந்தா என்னைவிட சிறியவர்களுக்கும் நான் சொல்லும் ஒரு விஷயம் ஒருபோதும் டாட்டூ வரையாதீர்கள். ஒரு போதும், எப்போதும் எப்போதும் பச்சைக்குத்தி கொள்ளாதீர்கள் எனக் கூறியிருக்கின்றார். சமந்தா தனது உடம்பில் 3 முறை டாட்டூ வரைந்துள்ளார். அந்த மூன்று டாட்டூமே அவருடைய கணவரான நாக சைதன்யாவுக்கு தொடர்புடையதாகவே இருக்கும். ஆனால் சமந்தா தற்போது நாக சைதன்யா பிரிந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் சென்ற அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். ஒன்றாக இருக்கும்போது வரையும் டாட்டூகள் பிரிந்த பிறகு வலியை ஏற்படுத்தும் என்பதால் இப்படி ஒரு அட்வைஸ்ஸை அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |