Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் திட்டங்கள் தீட்டினாலும்… மக்களிடம் சேர்க்க வேண்டியது நீங்களே…. முதல்வர் ஸ்டாலின்…!!!!

சென்னை கலைவானர் அரங்கில் பேரூராட்சித்தலைவர்கள், துனைத்தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் “நிர்வாக பணிகளில் ஈடுபட இருக்கும் உங்களிடம் சீரான, சிறப்பான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்களுக்காக பணியை சிறப்பாக செயலாற்ற வேண்டும். அதற்காகத்தான் இந்த பயிற்சிமுகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. கோட்டையில் அமர்ந்துகொண்டு நாங்கள் என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், அதனை சரியான முறையில் மக்களிடம் கொண்டுபாய் சேர்க்க வேண்டியது நீங்கள்தான். அந்த பொறுப்பும், கடமையும் உங்களிடம் உள்ளதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

உங்களை நம்பியே திட்டங்களை ஒப்படைக்கிறோம். மக்களுக்கு தொண்டாற்றவே தேர்தல் நடத்தப்படுகிறது. எவ்வித முறைகேடும், புகாரும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். அரசியல் சட்டத்திருத்தப்படி 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |