தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் நிர்வாகப் பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சியில் பொது நிதியிலிருந்து நிர்வாக அனுமதி வழங்குவதற்கான உச்சவரம்பை உயர்த்தி அறிவித்துள்ளார்.
தேர்வு நிலை, சிறப்பு நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும், உதவி இயக்குனர் அலுவலருக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், மாவட்ட ஆட்சியருக்கு ரூபாய் 30 லட்சத்தில் இருந்து ரூ 50 லட்சம் ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.