மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-19). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்தவகையில், சென்னையில் 13-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமில்லை. அதன்படி, ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.