Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மர்ம கும்பலின் வெறியாட்டம்…. “பிரபல ரவுடி” ஓட ஓட விரட்டி கொலை…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் பிரபல ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளார்கள்.

சென்னையிலுள்ள
தண்டையார்பேட்டையில் வசித்து வந்த பிரபல ரவுடியான ஜீவன் குமாரின் மீது போலீஸ் நிலையங்களில் 6 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர் புது வண்ணாரப்பேட்டையிலுள்ள பெருமாள் கோவில் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை அதி பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்துள்ளார்கள். அதன்பின்பு அங்கிருந்து தப்பி ஓடிய ஜீவன் குமாரை 6 பேர் கொண்ட கும்பல் விடாது ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார்கள்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறை அதிகாரிகள் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜீவன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் அங்கு ஜீவன் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |