மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடுதலாக மூலதனம் செய்வீர்கள். இழுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் சலுகை பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும். இன்று மாணவர்களுக்கு படிப்பில் கொஞ்சம் மந்தநிலை ஏற்படும். கவலை வேண்டாம் உங்களுடைய முழு திறனையும் மேம்படுத்தி வெற்றியே பெறுவீர்கள்.
குழந்தைகள் நலன் சிறக்கும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்க்கும் சூழ்நிலை இருக்கும். ஆகையால் உடல் நிலையில் மற்றும் கவனமாக இருங்கள். கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து மோதல் வேறுபாடுகள் இருக்கின்றன. முடிந்தவரை விட்டுக்கொடுக்க தயாராக இருங்கள். அவர்களிடம் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் தலையை ஆட்டிக் கொண்டு செல்வது மிகவும் நன்று.பிரச்சினையிலிருந்து விடுபட முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக உள்ளது . அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பாக வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : காவி மற்றும் நீலம்