பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி தனது நிறுவன தயாரிப்பு கார்களின் அனைத்து மாடல்களின் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி விளங்குகிறது. அது தற்போது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. அந்த விலை உயர்வும் ஆர்டர்களைப் பொறுத்து 0.9% முதல் 1.9% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இரும்பு உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே மஹிந்திரா அண்ட் மஹிந்திராநிறுவனம் கடந்த வாரம் அனைத்து மாணவர்களுக்கான விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து மாருதி சுசுகி விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கார் வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.