கடந்த மாதம் சீன சந்தையில் ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதிஅறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்துடன் 150W சார்ஜிங் கொண்ட GT Neo3 மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் GT Neo3 ஸ்மார்ட்போனின் 80W மற்றும் 150W என இரண்டு வேரியண்ட்களும் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகிவிட்டது.
ரியல்மி GT Neo3 அம்சங்கள்:
– 6.7 இன்ச் 2412×1080 பிக்சல் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
– மாலி-G510 MC6 GPU
– 6GB / 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
– 8GB / 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 50MP பிரைமரி கேமரா, OIS, f/1.88, LED ஃபிளாஷ்
– 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.25
– 2MP மேக்ரோ கேமரா, f/2.4
– 16MP செல்ஃபி கேமரா, f/2.45