Categories
அரசியல்

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் ஓய்வூதியம் உயர்வு?…. மத்திய அரசு…. ….!!!!

ஓய்வுதியம் பெறுவோரின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் விரைவில் ஓய்வூதியம் உயர்த்தப்படும். 80 வயதில் ஓய்வு ஊதியம் 20 சதவீதம் உயரும். ஆனால் 65 வயது முதல் ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்த்தினால் சரியாக இருக்கும் என்று பென்ஷனர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு பென்சன் தொகையை ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து நிதியமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும், அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகை வருடத்திற்கு ஒரு சதவீதம் உயர்த்தப்படும்.

மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதால் மருத்துவ படிக்கான தொகையை உயர்த்தி தரவேண்டும் என ஓய்வூதியதாரர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் மருத்துவப்படி தொகைஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவது குறித்தும் அரசு பரிசீலனை செய்து வருவதாகவும்,இதுபோக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு அரசு ஆதரவு தரவேண்டும் எனவும் பென்ஷனர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |