Categories
அரசியல்

புதுசா வீடு கட்ட போறீங்களா?…. உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. பெண்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு…..!!!!

தற்போது வீடு கட்டுவதற்கு அதிக செலவு ஆகிறது. அதனால் பல்வேறு வங்கிகள் குறைந்த வட்டியில் மக்களுக்கு வீட்டுக் கடன் வழங்கி வருகின்றன. குறைந்த வட்டியில் மட்டுமல்லாமல் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு வங்கிகள் சலுகை முறையில் கடன் வழங்குகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெண்களுக்கான புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி இந்த சலுகையின் கீழ் பெண் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். ஆனால் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில்தான் இந்த சலுகை கிடைக்கும். 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கடன் பெறலாம். ஒட்டுமொத்த கடன் காலம் 30 ஆண்டுகள்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 6.65 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அதற்கான செயல்பாட்டு கட்டணம் மிகவும் குறைவு தான். கூடுதல் கட்டணங்கள் எதுவும் கிடையாது. கூட்டியே கடனை அடைப்பதற்கும் கட்டணங்கள் கிடையாது. வழக்கமான வாடிக்கையாளர்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை விட பெண் வாடிக்கையாளர்கள் வாங்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைவு. எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |