செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகையும், ஆந்திர பிரதேசத்தின் அமைச்சருமான ரோஜா, அமைச்சராக பதவி ஏற்ற போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் பயணித்து கொண்டிருப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் ஆணாதிக்க சமூகத்தில் ஜெயலலிதா அம்மையார் வாழ்ந்து காட்டினார். அதேபோல் நான் அரசியலுக்கு வரும் போது அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு தான் வந்தேன். அந்த அளவிற்கு ஜெயலலிதா அம்மையாரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அரசியலில் நிறைய துன்பங்களை சந்தித்தேன். எந்த கஷ்டம் வந்தாலும் மக்களுடைய அன்பு எனக்கு இருக்கிறது. அது இருந்தால் எத்தனை பிரச்சனை வந்தாலும் சந்திக்கலாம். கஷ்டம் கொடுக்க 10 பேர் இருந்தாலும் சப்போர்ட் பண்ண நூறு பேர் இருக்கிறார்கள். என்னுடைய கணவர் பெரியார் கருத்துக்களை பின்பற்றுபவர். அதனால் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர். மேலும் என்னுடைய வெற்றிக்கு என்னுடைய கணவர் தான் காரணம். பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால்தான் தன்னை அரசியலில் சாதிக்க தனது கணவர் உதவி செய்தார் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.