உக்ரைன் ரஷ்யா போரினை தொடர்ந்து உக்ரைனைச் சேர்ந்த ரஷ்ய சார்பு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கியின் மனைவி மார்ச்சென்கோ பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு யூ டியூப் வழியாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிகும் உங்களுக்கும் உள்ள நட்புறவை பயன்படுத்தி ரஷ்ய ராணுவத்திடம் அகப்பட்டுள்ள பிரித்தானிய வீரருக்கு மாறாக எனது கணவர் மெட்வெட்சுக்கை பரிமாறிக்கொள்ள நீங்கள் உதவவேண்டும் எனக் கூறிள்ளார். அதோடு உங்கள் குடிமக்களின் மீது உங்களுக்கு உள்ள அக்கறை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த தருணம் எனவும் இந்த விவகாரத்தில் நீங்கள் தாமதமாக இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.
Categories