நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மலிவான விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் வங்கி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக கேரளாவில் மே மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
வங்கி சேவை மட்டுமல்லாமல் மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் செலுத்தும் வசதியும் அறிமுகம் ஆகிறது. இந்த ஆண்டிற்குள் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 1000 கடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் கிராம மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் எங்கும் அலையாமல் அவர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.