Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக.… குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு…!!!

சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த குறைதீர் கூட்டத்தில் 146 பி.சி., 115 எம்.பி.சி./ டி.என்.டி. சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, 10.5% ஒரு சாதி இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 31-ஆம் தேதி அன்று பிறப்பித்த தீர்ப்பை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். சட்டம் 8 / 2021- கீழ் போடப்பட்ட அனைத்து சேர்க்கை, நியமனமும் செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் கல்வியில் ஏற்கனவே சேர்ந்த வன்னிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் தங்களது படிப்பினை தொடர அனுமதித்தும், வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும்  115 சமூக மாணவர்களுக்கு கடந்த வருடம் கிடைக்க வேண்டிய இடத்தில் மறுபடியும் சேர்க்க வேண்டும்.

உடனே சாதிவாரி சமூக கல்வி நிலை கணக்கெடுப்பை வெளிப்படைத் தன்மையோடு நடத்தி அறிஞர் குழுவின் மூலம் ஆய்ந்து அறிந்து பல சாதி குழப்பங்களை சரிசெய்து அனைவருக்கும் சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்கள். மேலும் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உட்பட பல மனுக்களை பொதுமக்கள் அளித்துள்ளனர்.

Categories

Tech |