Categories
மாநில செய்திகள்

கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… உணவுத் துறை அதிரடி உத்தரவு…!!!!!!

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, நெல் கொள்முதல் செய்கின்றது.
இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கமிஷன் கேட்பது, எடை குறைத்து வாங்குவது போன்ற முறைகேடுகள் நடைபெறுகிறது. இதுபற்றி, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நெல் கொள்முதலில் முறைகேடை தவிர்க்க, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணித்தல், தீவிர ஆய்வு என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், சில நிலையங்களில் பணம் வசூலித்துவருகின்றனர். இரு மாதங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட பட்டியல் எழுத்தர் பதவியில் உள்ள, 27 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருகின்றனர்.  மேலும் பாதிக்கப்படுவோர் புகார் அளிக்க முன்வர வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள் மீது உடனடியாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |