Categories
தேசிய செய்திகள்

“லீவு எடுத்தவங்களும் உடனே வாங்க”…. அதிர்ச்சியில் போலீசார் ….உ.பி அரசு அதிரடி உத்தரவு…!!!!!!!

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மத ரீதியிலான மோதல் சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  மோதல் சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கிடையே, ரமலான், அக்‌ஷயதிருதியை போன்ற பண்டிகைகள் (மே 3) ஒரேநாளில் வர இருக்கிறது. இதனை தொடர்ந்து அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு  பாதுகாப்புகள்  பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அந்தமாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் போலீசார், நிர்வாக அதிகாரிகளுக்கு 4-ம் தேதி வரை விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், விடுமுறையில் உள்ள போலீசார் அடுத்த 24 மணி நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்றும்  உத்தரபிரதேச முதல்-மந்திரி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 4-ம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை வழங்கப்படாது எனவும் ஏற்கனவே விடுமுறையில் உள்ளவர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு உடனடியாக பணியில் இணையும் படி அறிவுத்தப்பட்டுள்ளதாகவும் உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |