சட்டவிரோதமாக காரில் போதை பொருள் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் சட்டவிரோதமாக காரில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த செல்வம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரில் இருந்த 70 கிலோ மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.