Categories
அரசியல் மாநில செய்திகள்

புகழ்ந்து பேசுனா விருது கொடுப்பாங்க – பாஜகவை நக்கலடித்து, விமர்சித்த சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசிய இனத்துக்கு என்று ஒரு தேசம் வேண்டும் என்று சிந்தித்த பெருந்தமிழர், அதற்காகவே நாம் தமிழர் என்ற அரசியல் பேரியக்கத்தை தொடங்கி, அயர்லாந்தில் ஐரிஷ் ….. நாங்கள் ஐரிஷ் மக்கள் என்கின்ற அமைப்பை தொடங்கி அவர்கள்,  தங்களுக்கென்று தனி நாடு கேட்டுப் போராடிய போது,  அவர்கள் டெய்லிமிரர் என்கின்ற ஒரு இதழை நடத்தினார்கள்.

அங்கே படிக்க சென்ற நம்முடைய ஐயா சி பா ஆதித்தனார் அவர்கள், 5 லட்சம் மக்கள் தனிநாடு கேட்கும் போது, ஐந்து கோடி தமிழர்கள் நாம் ஏன் தனி நாடு அடைந்து விடுதலை பெற்று, பெருமையுடன் வாழக்கூடாது என்ற ஒரு உணர்வோடு இங்கு வந்து நாம் தமிழர் என்ற இயக்கத்தைத் தொடங்கி,  மக்கள் நாட்டு நடப்புகளை அடித்தட்டு மக்கள், உழைக்கும் மக்கள்,

எல்லோரும் நாட்டில் என்ன நடக்கிறது ? என்ற செய்தியை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பெரு நோக்கோடு தினத்தந்தி என்ற நாளினை தொடங்கினார்கள். அவருக்குப் பிறகு அவருடைய அன்பு மகன், நம்முடைய அய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்கள்…. இதழியல் உலகின் வேந்தராக விளங்கியவர். தொடர்ந்து அதை சிறப்புர நிர்வகித்து நடத்தி வந்தார்கள்.

அதோடு மட்டுமல்லாது, ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்து எண்ணற்ற விளையாட்டு வீரர்களை இந்த நாட்டிற்கு உருவாக்கித் தந்த பெருந்தகை நம்முடைய அய்யா சிவந்தி ஆதித்தனார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அப்படிப்பட்ட ஒரு பெரும் மகனுடைய நினைவை போற்றுகின்ற  நாள் இன்று. தமிழர்களுக்கு எத்தனையோ பெருமைமிகு அடையாளங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தினத்தந்தி என்கின்ற நாளேடு. அதில் முதல் எழுத்தே வெல்க தமிழ் என்று தான் இருக்குது.

அப்படிப்பட்ட  இதழியல் உலகின் உடைய ஒரு வேந்தராக விளங்கிய நம்முடைய அய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி பெருமையோடு தன்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறது என தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், மோடி அவர்களை அம்பேத்கரோடு இளையராஜா ஒப்பிட்டு,  புகழ்ந்து பேசினால் விருது கொடுப்போம் என்கிறார்கள்.  இதில் என்ன கருத்து சொல்வதற்கு இருக்கின்றது ? என கிண்டலடித்தார்.

Categories

Tech |