Categories
மாநில செய்திகள்

“மாணவர்கள் மீது உங்கள் கனவுகளை திணிக்காதீர்கள்”…. பெற்றோர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்….!!!!

பெற்றோர்கள் தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழுகளை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மாணவ, மாணவிகள் கற்கும் கல்வி தான் திருட முடியாத சொத்து. பள்ளி கல்விக்கு தமிழக அரசு மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய மூவருடைய சிந்தனை நேர்கோட்டில் இருந்தால் தான் கல்வி நீரோடை சீராக செல்ல முடியும். உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல, அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்.

அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய அன்பை தரலாம். உங்களின் சிந்தனைகளை அல்ல, அவர்களுக்கு என்று அழகான சிந்தனைகள் உண்டு. அவர்களின் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடு அமைக்கலாம். அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல. உங்களுடைய குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறார்களோ? அதற்கு தடை போடாமல் உதவி செய்யுங்கள். பெற்றோர்கள் தங்களது கனவுகளை குழந்தைகளின் மீது திணிக்க வேண்டாம். பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் இந்திய துணை கண்டத்தில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது” என்று முதல்வர் பேசினார்.

Categories

Tech |