Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் விபச்சாரம்… “தங்கும் விடுதி மேலாளர் உட்பட 2 பேர் கைது”… போலீஸ் அதிரடி…!!!

ஏற்காட்டில் ஆன்லைன் மூலமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட தனியார் தங்கும் விடுதி மேலாளர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின் பேரில் சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் காவல்துறையினர் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரபல தனியார் தங்கும் விடுதியில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடப்பதை கண்டுபிடித்தனர்.

அதாவது இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து அவர்களை தங்கும் விடுதிக்கு நேரில் வர வைத்து விபச்சாரம் நடந்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தங்கும் விடுதி மேலாளரான சேலம் அங்கம்மாள் காலனியில் வசித்து வந்த நடராஜன்(65), ஏற்காடு மஞ்சகுட்டையில் வசித்து வந்த வெங்கடேஷ்  என்பவருடைய மகன் ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட கோவை மாவட்டம் வேலாண்டி பாளையத்தில் வசித்து வரும் 27 வயது இளம்பெண்ணை மீட்டு சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |