அரசு மருத்துவமனைகளில் பிராண்டட் மருந்துகளை பரிந்துரை செய்தால் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
சத்தீஷ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் ஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ஸ்ரீதன்வந்திரி ஜெனரல் மெடிக்கல் ஸ்டோர் திட்டம் பற்றி எடுத்துரைத்தார். இவர் அரசு மருத்துவமனைகளில் ஜெனரல் மருந்துகளுக்கு பதிலாக பிராண்டட் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதாக குற்றம் எழுந்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ஸ்ரீதன்வந்திரி மெடிக்கல் 159 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மருத்துவமனைகளில் பிராண்டட் மருந்துகளை பரிந்துரை செய்யும் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி எச்சரித்துள்ளார்.