இந்திய ரயில்கள் வேகமாகச் செல்வதில்லை என தணிக்கை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சிஏஜி தணிக்கை குழு ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் ரயில்கள் வேகமாகவும், உரிய நேரத்தில் சென்றடைவது இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பயணிகள் ரயில்களின் வேகத்தை 75 கிலோ மீட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டது. ஆனால் அஞ்சல் மற்றும் விரைவு ரயில்களின் சராசரி வேகம் 50.6 கிலோமீட்டர் ஆகவே உள்ளது. இதனால் பயணிகள் ரயில்களின் வேகம் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கிறது.
இந்த ரயில்களில் வேகத்தை அதிகரிக்காவிட்டால் ரயில்வே நிர்வாகத்திற்கு நிதிப்பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக 1000 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 19.52 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் கடந்த 2020-ஆம் ஆண்டு 19.47 நிமிடங்களாக குறைந்துள்ளது. கிட்டதட்ட 7 வருடங்களாக எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை. இதனையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு பயணிகள் ரயில் 1000 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு 27.37 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
ஆனால் கடந்த 2020-ஆம் ஆண்டில் 6 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துள்ளது. அதன்பிறகு கடந்த 2013-ம் ஆண்டு 50 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு மின்சார ரயில்கள் 1.13 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. இதை விட கூடுதலாக 6 நிமிடங்கள் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து எடுத்துள்ளது. இதிலிருந்து நீண்டகாலமாக எம்.பிஎஸ் வரம்பு அதிகரிக்கப்படுமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையின் படி .67.23% ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைகிறது.
மேலும் கடந்த 2008-09 மற்றும் 2018-19 ஆண்டுகளில் ரயில்வே உள்கட்டமைப்பிற்காக 2.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகள் மெதுவாக நடைபெறுவதால் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணிகள் தாமதமாக நடைபெறுவதற்கு காரணம் நிதி நெருக்கடி, தொழிலாளர் பிரச்சனை, டிராக் மிஷின் குறைபாடு, அதிக லைன் கொள்ளளவு பயன்பாடு, பிளாக் போதுமான அளவு வழங்கப்படாதது, ஒருங்கிணைந்த பிளாக் இல்லாதது போன்றவைகள் ஆகும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.