திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி வருவதாக அம்மாநில விலங்கு வள மேம்பாட்டு துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதனால் 60க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், பன்றிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் வடக்குப்பகுதி நோய் கண்டறிதல் சோதனைக் கூடத்திற்கு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அனுப்பப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் 13-ஆம் தேதி கிடைத்த பரிசோதனை முடிவில் அனைத்து மாதிரி களிலும் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து அந்த பண்ணையிலுள்ள அனைத்து பன்றிகளையும் கொள்வதற்கு திரிபுரா அரசு உத்தரவிட்டுள்ளது.முதற்கட்டமாக 8 அடிக்கு 8 அடி குழிகள் வெட்டி அனைத்து பாதிக்கப்பட்ட பன்றிகளையும் புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை குறித்து சோதனை கூட அதிகாரிகள் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மிசோரத்தில் 700 பன்றிகள் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் 17 கிராமங்களுக்கு பரவி உள்ளதாக கூறப்படுகின்றது.