மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கக்கரைக்கோட்டை ஆதி திராவிடர் தெருவில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பவுன்ராஜ் விளார்-கொல்லாங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பவுன்ராஜின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பவுன்ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து நல்லதம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.