1. புளிய மர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும்.
2. புளிய மர இலையை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் குணமாகும்.
3. முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும்.
4. பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி நெய் விட்டு லேசாக வறுத்து 1.2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இருவேளை உட்கொண்டுவர முறிந்த எலும்புகள் விரைவில் கூடும் சுளுக்கு மற்றும் அடிப்பட்ட வீக்கம் குணமாகும்.
5 .பிரண்டைஉள்ளே உள்ள உப்பை பொடி செய்து 10 கிராம் ஜாதிக்காய் சூரணம் 20 கிராம் அளவுடன் தயார் செய்து தினசரி காலை இரவு என இரு வேளைகள் ஆக மூன்று நாட்கள் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகி நரம்பு பலப்படும்.
6. காலில் முள் குத்திய இடத்தில் முள்ளை எடுத்த பின்னர் வெற்றிலையில் நல்லெண்ணெய் விட்டு அனலில் வாட்டி சூட்டோடு வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க அந்த வலி நீங்கும்.