கல்வி நிறுவனங்கள் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே மணலிக்கரை பகுதியில் புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் டயஷ் ரெஜின் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்திக் கொண்டு சென்றனர். அதன்பிறகு கொல்லங்கோடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியின் சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டு சென்றனர். இதேப்போன்று புதுக்கடை பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பயிற்சி மையம் மற்றும் மணவாளக்குறிச்சி பகுதியில் அமைந்திருக்கும் பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி சார்பிலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.