மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறது. இந்த துறைமுகத்தில் உள்ள நுழைவு வாயிலில் அடிக்கடி படகுகள் விபத்துக்குள்ளாகிறது. இதனால் மீனவர்கள் பலர் இறந்துள்ளனர்.
எனவே துறைமுகத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்தனர். மேலும் துறைமுகத்தின் கரைகளில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் துறைமுகம் வெறிச்சோடி கண்ணப்படுகிறது.