Categories
Uncategorized உலக செய்திகள்

கொட்டித் தீர்க்கும் கனமழை…. பெரும் வெள்ளத்தில்…. சிக்கி தவிக்கும் பிரபல நாட்டு மக்கள்…!!

கொட்டி தீர்க்கும் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தினால் 443 பேர் உயிரிழந்துள்ளனர். 

தென்ஆப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து பெய்த கனமழை காரணத்தினால் பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த கன மழையினால் சாலைகள், வீடுகள், பள்ளி கூடங்கள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதோடு பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாகாண நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் கலாசார விவகார செயல் குழு உறுப்பினர் சிபோ லோமுகா கூறியதாவது “வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு உதவியாக செயல்பட மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாலைகள், குடிநீர் வினியோகம், சுகாதாரம் மற்றும் மின்சாரம் போன்ற பாதிப்படைந்த உட்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த தொடர் கன மழையினால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 443 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 63 பேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணியின் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று மாகாண முதல்- மந்திரியான சிலே ஜிகாலாலா கூறியுள்ளார். இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 500 பள்ளி கூடங்கள் மூடப்பட்டு உள்ளன.  மேலும் 100 பள்ளி கூடங்கள் வரை சேதமடைந்து உள்ளன என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |