புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் (MGR Central Railway station) சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, ஹைதரபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதேபோல், சென்னையில் இருந்து தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் இருந்து இன்டர்சிட்டி, சதாப்தி, மங்களூரு எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஏராளமான ரயில்கள் கோவைக்கு இயக்கப்படுகிறது.
இவை ரயில் மூலம் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.குறிப்பாக கோவையில் இருந்து காலை 6.15 மணிக்கு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்னை வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் எண் -12680(Intercity Express) பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்வார்கள். இந்த ரயில் ரயில் ஏப்ரல் 19, 20, 26, 27 ஆகிய 4 நாட்களுக்கு கோவையில் இருந்து வேலூர் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல், மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ரயில் எண் – 12679 மேற்குறிப்பிட்ட தேதிகளில் மதியம் 2: 30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியில் இருந்து மாலை 4:20 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.