Categories
உலக செய்திகள்

ரஷ்யா: “பணவீக்கம் சீராகி வருது”…. அதிபர் வெளியிட்ட தகவல்….!!!!!!

உக்ரைன் நாட்டு பிரச்சனையில் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது மேற்கு நாடுகள் விதித்தது. இதனால் மேற்கு நாடுகளானது தனக்குத் தானே விளைவுகளை சந்தித்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர்புதின் தெரிவித்துள்ளார். உள்நாட்டு பொருளாதார நிலை தொடர்பாக பேசிய புதின், பணவீக்கம் சீராகி வருவதாக, தெரிவித்தார்.

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகள் கடனளிப்பது எளிதாக மாற்றினாலும் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பட்ஜெட்டை பயன்படுத்த வேண்டும் என புதின் தெரிவித்தார். ஆகவே புது நிபந்தனைகளின் கீழ் வெளி நாட்டு வர்த்தகங்களில் தேசிய நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான செயல்முறையை ரஷ்யா விரைவுபடுத்த வேண்டும் என்று புதின் குறிப்பிட்டார்.

Categories

Tech |