தனுசு ராசி அன்பர்கள்…!! சிலர் இடையூறு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள். செயல்களில் அதிக தற்காப்பு வேண்டும். இன்று தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாக பயன் படுத்துவீர்கள். தியானம் தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும்.இன்று தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம், யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும்போது கவனமாக செய்யுங்கள்.
வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் சிரமம் இல்லாமல் இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையிலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்