Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தலையில் விழுந்த இரும்பு கூண்டு…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நாமக்கல்லில் நடந்த சோகம்….!!

லாரியில் இருந்த இரும்பு கூண்டு தலையில் விழுந்ததால் வட மாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையத்தில் தனியார் அக்ரோ உற்பத்தி நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பனியில் சத்தீஸ்கார் மாநிலம், பாஜங்கள் ஜோகியன் பகுதியை சேர்ந்த ராகுல்குமார்(18) என்ற வாலிபர் கடந்த 1 மாதமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்செங்கோடு பட்டறைமேட்டில் இருந்து இரும்பு கூண்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ராகுல்குமார் மற்றும் சக தொழிலார்கள் சென்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து சீதாராம்பாளையம் அருகே உள்ள வேகத்தடை ஒன்றில் லாரி ஏறி இறங்கியபோது லாரியில் இருந்த இரும்பு கூண்டு திடீரென ராகுல்குமார் தலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற தொழிலாளர்கள் ராகுல்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராகுல்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |