Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் போர் தொடங்கும் அபாயம்….!! கடும் எச்சரிக்கை விடுத்த தலிபான்கள்….!!

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் மத்தியில் தெக்ரி-இ-தலீபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் அவ்வப்போது இரு நாடுகள் மீதும் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. அந்த வரிசையில் தெக்ரி-இ-தலீபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஆறுக்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதற்கு பழிவாங்கும் விதமாக ஆப்கானிஸ்தானை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உட்பட 6 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. யாருக்கும் சாதகமானது அல்ல போர் தொடங்கினால் மிகப்பெரும் ஆபத்து உருவாகலாம். போர் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மை உருவாகலாம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |