Categories
தேசிய செய்திகள்

3 நாட்களாக அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம்…. கவுன்சிலர் வெறிச்செயல்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோடாட் நகரில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை ஆடைகள் களையப்பட்டு இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த இருவர் பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பது போல அழைத்துச் சென்ற ஒரு ரூமில் அடைத்து வைத்துள்ளனர். அதன்பிறகு அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த கொடுமை இரண்டு நாட்களாக நீடித்துள்ளது. இந்நிலையில் அங்கிருந்து பாதிக்கப்பட்ட பெண் தப்பித்து வெளியே வந்த அப்பகுதியில் மயங்கிய நிலையில் சுற்றி வந்துள்ளார்.

தற்போது அந்தப் பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவர் அப்பகுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் கவுன்சிலர் சம்பந்தப்பட்டுள்ளார்.

Categories

Tech |